பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் வங்கி ஊழியர் சங்கங்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன என்று செய்தி வந்துள்ளது. தங்கள் எதிர்ப்பை வலியுறுத்தி ஒன்பது முக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் ஒரு குடை அமைப்பாக விளங்கும் United Forum of Bank Unions (UFBU) சனிக்கிழமை அன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டின்போது அறிவிப்பு விடுத்த மத்திய நிதியமைச்சர்

பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது முதலீட்டை விலக்கும் திட்டத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது டிசம்பர் 16 & 17 தேதிகளில் அகில இந்திய வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தியுள்ளன.

UFBU-ல் இணைந்திருக்கும் சங்கங்கள்

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC), தேசிய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு (NCBE), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) .