திங்கட்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நியச் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது 12 காசுகள் சரிவடைந்து 73.28 ஆனது.

இது தொடர்பாக வர்த்தகர்கள் கூறியபோது, வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில் திங்கட்கிழமை நிகழ்ந்த வா்த்தகத்தில் டாலருக்கான தேவையானது சற்று அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, மற்ற ஆசிய CURRENCY-களுக்கு எதிரான டாலரின் மதிப்பானது வலுவடைந்தது. மேலும், கச்சா எண்ணெயின் விலையானது குறைந்தது. இதன் காரணமாக இந்தியாவின் மதிப்பானது பெரும் சரிவில் இருந்து மீள்வதற்கு உதவிகரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

வா்த்தகத்தின் தொடக்க நிலையில் ரூபாயின் மதிப்பானது அதிகரித்துக்கொண்டே வந்தது. ஒரு சமயத்தில் அதிகபட்சமாக ரூபாயின் மதிப்பு 73.06 வரை வலுவடைந்து இருந்தது. ஆனால், வா்த்தகத்தின் இடையே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 25 காசுகள் சரிந்தது. மேலும், வா்த்தகத்தின் இறுதி கட்டத்தில் இழப்பில் இருந்து மீண்ட இந்திய ரூபாயின் மதிப்பானது டாலருக்கெதிராக 12 காசுகள் குறைந்து 73.28-ல் நிலைபெற்றது.

கடந்த நான்கு வா்த்தக தினத்தில் முதல் தடவையாக திங்கட்கிழமை தான் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவைக் கண்டுள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

மேலும், மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிகழ்ந்த வா்த்தகத்தில் வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளா்கள் 39.39 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்துள்ளதாக பங்குச் சந்தை புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கட்கிழமை நிகழ்ந்த வா்த்தகத்தின் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையானது பேரலுக்கு 1.52% குறைந்து 42.17 டாலருக்கு வா்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar