திருநெல்வேலிக்கு அருகில் கங்கைகொண்டானில் டாடா குழுமம் 4GW திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

இந்த திட்டத்திற்கு டாடா குழுமம் செய்யவிருக்கும் முதலீடு ரூ.3000 கோடி. இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதால் 2000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவர். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

டாடா குழுமம் செய்யும் இந்த முதலீடு மிகவும் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு கவர்ச்சிகரமான சூரியசக்தி தயாரிப்பு தளத்தை அமைத்திருக்கும் மாநிலமாக நம் மாநிலத்தை இத்திட்டம் முன்னிறுத்தும். இதன் மூலம் புதிய முதலீடுகள் அதிகம் கிடைக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

நம் மாநிலத்தில் ஏற்கனவே விக்ரம் சோலார் தனது தொழிற்சாலையை ஜூலையில் நிறுவியுள்ளது. இது 1.2GW திறன் அளவு கொண்டது. 3.3GW திறன் கொண்ட முதல் சூரியசக்தி திட்டம் 2023 இரண்டாம் அரையாண்டில் செயல்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதலீடு $684 மில்லியனாக இருக்கலாம்.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் ஜாம்நகரில் பெரிய அளவில் சோலார் போட்டோவோல்டைக் செல், பசுமை ஹைட்ரஜன், பேட்டரீஸ் ஆகியவை தயாரிக்க ரூ.60000 கோடி மதிப்பில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலைகள் மூலம் 100GW சூரியசக்தி மின் உற்பத்தி தளம் அமைக்கும் ரிலையன்ஸின் கனவு வலுப்பெறும்.