மது விற்பனை 29 சதவீதம் சரிவு:

இந்தியாவில் அனைத்து வருடங்களும் மதுபான விற்பனையானது அதிகரித்து வருகின்ற நிலையில் 2020-ம் நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் கொரோனா தொற்றின் காரணத்தினால் அறிவிக்கப்பட்ட மது விற்பனை தடை, மது மீது போடப்பட்டுள்ள கொரோனா வரி, ஊரடங்கு ஆகியவற்றின் காரணத்தினால் மதுபான விற்பனையானது கிட்டத்தட்ட 29% வரை சரிந்துள்ளது.

இந்திய மதுபான கூட்டமைப்பு ஆனது வெளியிட்டு உள்ள ஆய்வில், நடப்பு நிதி ஆண்டில் முதல் ஆறு மாத காலகட்டத்தில், குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் இந்த மூன்று முக்கியக் காரணங்களால் நாட்டின் மதுபான விற்பனையானது சரிந்துள்ளது.

குறிப்பாக, நான்கு முக்கியமான மாநிலத்தில் மதுபானத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அதிகமான வரியின் காரணமாய் பெரிய அளவில் சரிவினை எதிர்கொண்டு உள்ளதாக இந்திய மதுபான கூட்டமைப்பு ஆனது தெரிவித்து உள்ளது.

கோவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு விதித்த ஊரடங்கினால் நாட்டிலுள்ள அனைத்துவித வர்த்தகங்களும் மற்றும் சேவைகளும் முடக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபிரியர்கள் மது வாங்கி அருந்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பின்னர், ஊரடங்கின் முதற்கட்ட தளர்வில் மதுபான கடையில் பல கட்டுப்பாடுகளுடன் மது விற்பனையானது துவங்கப்பட்டது.

ஊரடங்கின் காரணமாக பலவித கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மது விற்பனை துவங்கினாலும், பல மாநிலங்களில் மது மீதான கூடுதல் கொரோனா வரி விதிக்கப்பட்டு மாநில அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்கும், மக்கள் மத்தியில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மது விற்பனை ஆனது குறைக்கும் நோக்கத்திலும் வரி விதிக்கப்பட்டது.

மதுபான கூட்டமைப்பின் தலைவர் வினோத் கிரி அவர்கள் கூறுகையில், பல மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி காரணத்தினால் இந்தியாவின் மது விற்பனை ஆனது 5% முதல் 10% வரை இக்காலகத்தில் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மதுபான விற்பனையானது 49% வரை சரிந்தது என்றும் குறிபிட்டுள்ளார்.

அதேபோல, பல வாரத்திற்குப் பின்பு மது விற்பனை துவங்கப்பட்டதன் காரணமாக அதன் விற்பனை அளவு அதிகரித்தது. இருப்பினும், கடந்த நிதி ஆண்டை ஒப்பிட்டு பார்கையில் இரண்டாவது காலாண்டில் 9% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar