5% GST வரிக்குள் வரும் ஆன்லைன் உணவு வழங்கல் நிறுவனங்கள்

மெட்ரோ நகரங்களில் தினசரி உணவிலிருந்து, விருந்து, பார்ட்டி என பல விஷயங்களுக்கும் விரும்பிய உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்வது இப்போது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு இனிமேல் 5% GST வரி அமலுக்கு வந்துள்ளது. இது இம்மாதம் முதல் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் உணவகங்களில் மட்டுமே வசூல் செய்யப்பட்டு வந்த GST வரி இனிமேல் ஆன்லைன் உணவு வழங்கல் நிறுவனங்களுக்கும் பொருந்தும். உணவுப்பிரியர்களே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும்போது கூடவே 5% வரி செலுத்த தயார் ஆகிக்கொள்ளுங்கள்.

பிக் அப் & டிராப் வாகன சேவைகளுக்கு 5% GST வரி

இது மட்டுமல்லாது ஓலா, உபெபர் போன்ற பிக் அப் & டிராப் வாகனங்களான ஆட்டோ, டாக்ஸி, பைக் போன்ற வாகன சேவைகளுக்கும் இப்போது கூடுதலாக 5% GST வரி விதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தப்பி பிழைத்த ஜவுளித்துறை

இந்த GST வரி மாற்றத்தில் தற்காலிகமாக விலக்கு பெற்றது ஜவுளித்துறை மட்டுமே. GST வரி 5% லிருந்து 12% உயர்வு பெரும் என்று எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் தற்காலிகமாக இந்த வரி உயர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் தற்காலிக ஒத்திவைப்பு மட்டுமே, அடுத்த GST கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என அரசு வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.