விவசாய உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பண்ணை இயந்திரமயமாக்கல் மிகச்சிறந்த செயல்முறை. இந்தியாவில் நல்ல வரவேற்பும் இத்திட்டத்திற்கு கிடைத்துள்ளது. இத்திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு நல்ல வளர்ச்சி காண நமது இந்திய அரசு குறிப்பாக, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை (DAC&FW), வேளாண் அமைச்சகம் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

பண்ணை உள்ளீடு மற்றும் பண்ணை மின்சாரம் கிடைப்பதை மேம்படுத்தும் வகையில் இயந்திரங்களை கொள்முதல் செய்ய அரசு மானியம் வழங்கி விவசாயிகளுக்கு உதவுகிறது.

எங்கே, எப்படி இத்திட்டத்தில் இணைவது?

இதன் அடிப்படையில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணைந்து பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, www.agrimachinery.nic.in என்ற இணையத்தளத்தில் நேரடி பரிமாற்ற திட்டத்தில் (Direct Benefit Transfer in Agriculture Mechanisation) உரிய வழிமுறைப்படி மானியம் பெறலாம்.

ஈரோடு மாவட்டத்தில் மானிய நிதி ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டத்தில் பொது பிரிவு மற்றும் சிறப்பு கூறு விவசாயிகள், 50 இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற, ரூ.40.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தில் பயன்சார் சென்ற ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்த விண்ணப்பங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிகிறது. மேலும் விவரங்கள் பெறவேண்டுமாயின் ஈரோடு செயற்பொறியாளர் அலுவலகத்தை 0424-2270067 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.