ஸ்மார்ட்போனின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆனது இந்தியாவில் தலைமை இடமாக மாற்ற வேண்டும் என்னும் திட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு களத்தில் இறங்கியது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் நிகழ்ந்த காலத்தில் சீனாவிலிருந்து ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றிய போது தான் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மீது பெரிய நம்பிக்கை என்பது உருவானது.

இதன் காரணமாக பல நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போனிற்காக பிரத்தியேகமாக உற்பத்தி தளத்தினை அமைப்பற்கான பணிகளைச் செய்து வரும் இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் நிறுவனங்கள் தனது உற்பத்தியின் அளவை அதிகரிப்பதற்காக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி பணியைச் செய்து வரும் விஸ்திரான் நிறுவனம் உற்பத்தியினை அதிகரிப்பதற்காகவும், விரிவாக்குவதற்காகவும் கூடுதல் முதலீட்டைச் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் டெக் நகரமாக விளங்கி வரும் பெங்களூருக்கு சுமார் 70 கிமீ தொலைவிலுள்ள நாரசபுரா பகுதியில் அமைந்துள்ள விஸ்திரான் நிறுவனம் தொழிற்சாலையில் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கத்துடன் சுமார் ரூ.900 கோடி தொகையைக் கூடுதல் ஆக முதலீடு செய்யவதாக முடிவு செய்து அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

இதன் மூலமாக கூடுதலாக 8000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியும் என்றும் விஸ்திரான் நிறுவனம் நம்புகிறது. இதன் காரணமாக தென் மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar