விவசாயிகள் நலன் ஒன்றையே தங்கள் நிறுவனத்தின் முக்கிய கொள்கையாக வைத்து செயல்பட்டு வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் இப்போது மிகவும் மேம்பட்ட டைகர் டி.ஐ. 75 மற்றும் டைகர் டி.ஐ. 65 மாடல் டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்நிறுவனத்தின் செயல் இயக்குனர் ரமன் மிட்டல் கூறுகையில் “ஒவ்வொரு நாளும் நமது விவசாயிகள் பாராட்டுக்குரிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக கிசான் திவாஸ் அன்று அதிநவீன, சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் திறன் கொண்ட CRDகளுடன் கூடிய Tiger DI 75 4WD டிராக்டரை அறிமுகப்படுத்துகிறோம். எரிபொருள் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் நன்மைகளை வழங்கும் தொழில்நுட்ப சிறப்புடன் இந்த டிராக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் சிறந்ததாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் விவசாயிகளை முன்னோக்கி அழைத்து செல்லும் முக்கிய பங்கை வகிப்பதாக இந்த புதிய அறிமுகம் இருக்கும். விவசாயிகளின் கடின உழைப்பையும், வேளாண் பணிகளில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டையும் கவுரவிக்கும் வகையில் இவ்விரு டிராக்டர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.” என்று கூறினார்.

முதன்முதலில் இந்தியாவில் CRD தொழில்நுட்பத்தை டிராக்டர்களில் அறிமுகப்படுத்திய நிறுவனமாக திகழ்கிறது சோனாலிகா. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புகைவிதி கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாக இந்நிறுவன டிராக்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் உள்ள விவசாயிகளின் தேவைக்கேற்ப நவீன தொழில்நுட்பத்தை தொடர்ந்து அறிமுகம் செய்வதையே தமது நோக்கமாக கொண்டு செயல்படுகிறது இந்நிறுவனம்.

Tiger DI 75 4WD மற்றும் Tiger DI 65 மாடல் டிராக்டர்களில் குறிப்பிட்ட சில சிறப்பம்சங்கள் உள்ளன – Sky Smart Telematics, Engine immobilizer, நிகழ் நேர உறுதுணை போன்றவை. அதே போல் மற்ற டிராக்டர்களில் உள்ளது போலவே வெகிக்கிள் ஜியோ-பென்சிங், டிராக்கிங் முறை ஆகியவையும் இதில் உள்ளது. இந்த டிராக்டர்கள் ரூ.11 லட்சம் முதல் ரூ.11.20 லட்சம் வரையான விலையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.