இந்தியாவினுடைய சேவை துறை, உற்பத்தி துறை, அன்னிய முதலீடு ஆகியன சிறப்பான வளர்ச்சியினை அடைந்து வரும் இந்நேரத்தில் அமெரிக்காவினுடைய அதிபர் தேர்தல் ஆனது இந்திய சந்தைக்கு சாதகமாக வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதனால் மும்பை பங்குச்சந்தை ஆனது கடந்த சில வாரமாக தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் கோவிட்-19 தொற்றினை 90% வரை குணமாக்கக் கூடிய மருந்தினை ஃபைசர், ஜெர்மன் கூட்டணி நிறுவனம் பயோஎன்டெர் எஸ்ஈ ஆனது கண்டுபிடித்து ஆய்வில் வெற்றி பெற்றுள்ளதாகச் செய்தி வெளியாகி இருப்பது உலக நாடுகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையினை கொடுத்துள்ளது.

இதன் காரணமாக இந்திய சந்தையில் மட்டுமில்லாமல் சர்வதேச சந்தையிலும் சிறந்த வளர்ச்சியினை பதிவிட்டுள்ளது. இதனால், வர்த்தகம் ஆனது துவங்கும் சமயத்தில் மும்பை பங்குச்சந்தை ஆனது உயர்வுடன் துவக்கம் கண்டு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் இந்திய வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனத்தினுடைய வருவாய் மற்றும் லாப அளவீடுகள் ஆனது சிறந்த வளர்ச்சியினை கண்டு வரும் அதே சமயத்தில் நாட்டினுடைய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை ஆனது மேம்பட்டு வருகின்ற காரணத்தினால் வங்கி பங்குகள் மீதுள்ள டிமாண்ட்கள் மற்றும் முதலீடுகள் ஆனது அதிகரித்துள்ளது.

மேலும், திங்கட்கிழமைக்கான வர்த்தக முடிவில் 42,597 புள்ளிகளிளுடன் முடிவு பெற்ற சென்செக்ஸ் ஆனது, செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வர்த்தகத்தில் 42,959.25 புள்ளிகளுடன் துவங்கி அதிகபட்சமாக 43,316.44 புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

Author – Gurusanjeev Sivakumar