நாட்டிலுள்ள அனைத்து ATM மையங்களிலும் ஜனவரி 1-ம் தேதி முதல் பரிவர்த்தனை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தனது கணக்கிலிருக்கும் பணத்தை கட்டணமில்லாமல் எடுக்க வேண்டுமானால் அதே வங்கி ATM மையத்தில் ஒரு மாதத்தில் 5 முறையும், பிற வங்கி ATM-களில் 3 முறையும் எடுக்கலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ரூ.21/- கட்டணமாக வசூலிக்கப்படும். இது பழைய கட்டணத்திலிருந்து ரூ.1/- கூடுதல்.

விரைவில் அமலுக்கு வரும் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை கட்டண உயர்வு

இதைத்தொடர்ந்து வங்கிகளுக்கு இடையே செய்யப்படும் பரிவர்த்தனை கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவ்வாறு உயர்த்தப்படும் நிலையில், ரூ.15ஆக இருக்கும் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைக் கட்டணம் ரூ.17ஆகவும், பிற சேவைகளுக்கான கட்டணங்கள் ரூ.5-லிருந்து ரூ.6-ஆகவும் உயரும் என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் பாதிப்பிலிருந்து மீள வழி

இந்த புதிய கட்டண உயர்வு நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும்.ஆகவே அவர்கள் தமக்கு தேவைப்படும் தொகையை ஒன்று, இரண்டு தவணைகளிலோ அல்லது குறிப்பிட்டுள்ள 8 கட்டணமில்லா தவணைகளுக்குள்ளோ எடுத்துக்கொள்ளலாம். இதனால் அனாவசிய கட்டணம் தவிர்க்கப்படும். அதே போல் செலுத்த வேண்டிய அனைத்து payment-களையும் Google Pay, Paytm மூலம் செய்யலாம். இதனால் ATM கார்டுகளை பயன்படுத்துவது குறையும். மேலும் இது போன்ற நடவடிக்கைகளால் இனி வரும் நாட்களில் டிஜிட்டல் வழி பண பரிவர்த்தனை Google Pay, Paytm மூலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.