மோசடிகள் பற்றிய புகார் மற்றும் அழுத்தப்பட்ட சொத்துக்களை விற்பது ஆகியவை தொடர்பான விதிமுறை மீறல்களை கருத்தில் கொண்டு யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு RBI ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.

RBI நடத்திய ஆய்வு

ரிசர்வ் வங்கியினால் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு விஷயங்கள் வெளிவந்துள்ளன. அதாவது, கணக்குகளை வகைப்படுத்துவதில் உள்ள விதிகளுக்கு இனங்காமல் இருந்தது, முன்னெச்சரிக்கைகள் விடுத்தபின்பும் ஆண்டு அறிக்கையில் SR-கள் வெளியிடத் தவறியது என்று பல குறைபாடுகள் காணப்பட்டது என்று RBI கூறியுள்ளது.

மேற்படி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஒழுங்குமுறை இணக்கம் தொடர்பில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாக வைத்து தம்மால் எடுக்கப்பட்டது தான் என்றும், வங்கியுடன் ஏற்பட்டுள்ள வேறு எந்த பரிவர்த்தனைகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் வேலிடிட்டி பற்றி எதையும் குறிப்பிட விரும்பவில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இணங்காத செயல்பாடுகளை மேற்கொண்டதால் யூனியன் வங்கிக்கு அபராதம் விதிப்பதில் தவறென்ன உள்ளது என்று ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டீஸ்-கு யூனியன் வங்கி பதில் விளக்கம் கொடுத்ததோடு தன தரப்பு வாதத்தையும் வைத்தது. அதையும் கேட்ட பிறகே இந்த 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.