மாநிலங்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நவம்பர் மாத GST வரி பகிர்வு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.95,082 கோடி வரி பகிர்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது

மத்திய அமைச்சகம் GST-யாக வசூலிக்கப்பட்ட வரியில் 41% தொகையை ஒரு வருடத்தில் 14 தவணைகளாக மாநில அரசுகளுக்கு வழங்கும். இதில் மார்ச் மாதம் மட்டும் 3 தவணைகள் சேர்த்து அளிக்கப்படும். இந்த 3 தவணைகள் 2 தவணைகளாக குறைக்கப்பட்டு பதிலாக நவம்பர் மாதத்தில் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் நவம்பர் 22ஆம் தேதி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுமார் ரூ.95,082 கோடி அளவிலான தொகையைப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் இந்த கூடுதல் தொகையை கொண்டு உள்கட்டுமான மேம்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற கவனத்தில் இந்த நிதி ஒதுக்கப்படுவதாகத் தெரிகிறது. மொத்தத்தில் இந்த அறிவிப்பால் மாநில அரசுகளிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.