உலகம் முழுவதிலும் மருந்துகளை பெருமளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்ற முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருவதாக மத்திய ரசாயன மற்றும் உரங்கள்துறை அமைச்சர் சதானந்தா கவுடா அவர்கள் கூறி உள்ளார்.

மருந்து ஏற்றுமதியில் இந்தியா சாதனை:

மேலும், அவசர காலகட்ட நிகழ்வின் போது கொரோனா தொற்றுக்காக சிகிச்சை அளிக்க மரபின் கீழ் எச்சிக்யூ மற்றும் அஜித்ரோமைசின் மருந்துகளானது அடையாளம் காணப்பட்டு இருந்ததாக கூறியுள்ளார். உலகம் முழுவதும் 120 க்கும் மேலான நாடுகளுக்கு இந்தியா தான் இந்த மருந்துகளை வழங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலமாக, மருந்துகள் விநியோகிப்பின் நம்பகம் வாய்ந்த விநியோகஸ்தர் என்னும் பெயரை இந்தியா பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிக் கூறினார்.

அமெரிக்கா FDA விதிமுறைகளுக்கு ஏற்றாற்போல் செயல்படும் அதிக எண்ணிக்கை கொண்ட மருந்து ஆலையினை கொண்டுள்ள நாடு இந்தியா தான் என குறிப்பிட்டுள்ளார். உயர்தர வசதிகளை கொண்டுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற 20 நாடுகளுக்கு பில்லியன் கணக்கான டாலர் மதிப்புடைய மருந்துப் பொருளை இந்தியா தான் ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் கூறுகையில் 2024 ஆம் ஆண்டிற்குள் இந்திய மருந்துதுறையானது 65 பில்லியன் டாலர் தொழில் ஆக மாறும் என்று தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 4 மருத்துவ கருவிகளை தயாரிக்கின்ற பூங்காக்கள், 3 மொத்த மருந்துகள் தயாரிக்கும் பூங்காக்கள், 7 பெரிய பூங்காங்களினை முன்னெடுக்கும் திட்டத்தினை தாங்கள் அண்மையில் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

Author – Gurusanjeev Sivakumar