யார் இந்த Zepto

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பிலிருந்து வெளியேறிய 19 வயதான ஆதித் பாலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகியோரால் நிறுவப்பட்டது Zepto. கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் 2021-லிருந்து தனது சேவைகளை வழங்கி வருகிறது.

10 நிமிடத்தில் மளிகை டெலிவரி எனும் ஐடியாவுடன் செயல்படுகிறது இந்த Zepto ஆன்லைன் ஆப். நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை, பெங்களூரு,குர்கான், மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தனது சேவையை Zepto வழங்குகிறது. கூடிய விரைவில் கொல்கத்தா மற்றும் புனேவிலும் விரிவுபடுத்த இருக்கிறது என்று இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு முனைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் இன்னும் இரண்டு பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் தான் Zomato மற்றும் Swiggy. இந்த நிறுவனங்களுக்கிடையே பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும் இன்னும் முடிவொன்றும் எட்டவில்லை. இந்த பேச்சுவார்த்தையின் போது கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள் மிகவும் வலிமையாகவும், கடைசி சுற்றுக்கு தரப்பட்ட பிரீமியம் மதிப்பு $570 என்றும் இருந்ததாக தகவல் தெரிகிறது.

Swiggy நிறுவனம் Zepto வை வாங்க முனைப்புடன் இருக்க முக்கிய காரணம் ஒரு போட்டியாளரை சந்தையிலிருந்து வெளியேற்றவே. மற்றபடி Swiggy-ன் இன்ஸ்டாமார்ட் மளிகை விநியோக சேவையுடன் எப்படி Zepto ஒருங்கிணைக்கப்படும் என்பது பற்றியெல்லாம் இன்னும் விவாதிக்கப்படவில்லை.

தனித்து செயல்பட விரும்பும் Zepto

Zepto நிறுவனர் ஆதித் பாலிச்சாவை பொறுத்தவரையில் இந்நிறுவனத்தை வேறெந்த நிறுவனத்துடனும் கூட்டு சேர்க்கவோ, அல்லது வேறெந்த நிறுவனத்திடம் விற்கவோ விரும்பவில்லை என்றும் தனித்து செயல்படவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தை மேலும் வளர்க்க 1.1 பில்லியன் டாலர் நிதி உதவியை பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.