UIDAI ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆதார் நம்பர் வைத்தே ஒருவரால் இனி எளிதில் பணம் அனுப்ப முடியும் என்று கூறியுள்ளது. Bharat Interface for Money எனும் BHIM ஆப் மூலமாகப் பணம் அனுப்பும்போது அனுப்ப வேண்டியவரின் ஆதார் எண்ணை கொடுத்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பி விட முடியும். இப்போது அநேகமாக அனைத்து வங்கி கணக்குகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது.

லரிடம் இன்னமும் மொபைல் நம்பரோ, பணம் அனுப்பும் வசதி கொண்ட மொபைல் ஆப்களோ இருப்பதில்லை. அவர்களுக்கு பணம் அனுப்புவதில் உள்ள சிரமத்தை போக்கும் விதமாக இந்த BHIM ஆப் மூலம் வெறும் ஆதார் எண்ணை வைத்தே பணம் அனுப்பலாம்.

ஒருவேளை ஒரே நபர் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்து ஒரே ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டிருந்தாலும் எந்த வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மொபைல் இல்லாதவர்களும் எளிதில் இனி பணம் பெறவும் அனுப்பவும் முடியும்.