பண்டிகை காலத்தை தொடர்ந்து பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தங்களுடைய புதிய வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி ஆண்டுக்கு 6.9% குறைக்கப்பட்டு உள்ளது.

வட்டி குறைக்கப்பட்டு உள்ளதால் வாடிக்கையாளர்களுடைய தவணை சுமையானது குறையும் என்பது நல்ல செய்தி. குறிப்பாக, டாப் அப் கடன்களின் செலவும் குறைகிறது. கோவிட்-19 ஆல் ஏற்பட்ட பண நெருக்கடியில் தவிப்போருக்கு இந்த வட்டி குறைப்பானது சற்று ஆறுதலாக இருக்கும்.

இது தொடர்பாக பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், இந்த வட்டிக் குறைப்பு அறிவிப்பினால், வீட்டுக் கடன் வாங்கவுள்ள புது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக்கால உற்சாகம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏராளமான மக்கள் தற்போதைய செலவை குறைக்க போராடும் இச்சூழலில் இந்த வட்டிக் குறைப்பானது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வங்கி, ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி உள்ள வாடிக்கையாளர்களும், மீதம் உள்ள கடன்களை பஜாஜ் பைனான்ஸுக்கு மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக, கடனின் ஆரம்ப நிலையில் இருப்போருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ரூ.3.5 கோடி வரையிலான கடன்களுக்கு பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸின் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 6.9 சதவீத வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar