சென்ற வாரம் முழுவதும் பங்கு சந்தை அதிக ஏற்றங்களை சந்திக்காமலே இருந்து வந்தது. முதலீட்டாளர்கள் பலர் ஒவ்வொரு நாளும் இன்றைக்கு நிலைமை சற்று முன்னேறும் என்று பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர், ஆனால் அவர்களுக்கு சாதகமான நிலை இருக்கவில்லை.

வியாழக்கிழமை கூட பல முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் பங்கு மதிப்பு குறையவே செய்தது. பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, மஹிந்திரா, SBI இன்னும் பலவற்றின் பங்குகள் மதிப்பு குறைந்தன. ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டி லேப் போன்றவை உயர்ந்து காணப்பட்டன.

பங்கு சந்தைகள் சரிவை நோக்கி செல்ல என்ன காரணம்?

இவ்வாறு பங்குகள் விலை ஏன் சரிவை நோக்கி செல்கின்றன? நிபுணர்களின் கணிப்பு என்னவாக இருக்கும்? ஆசிய பங்குச் சந்தைகள் நமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கவில்லை. இது ஒரு முக்கிய காரணமாக இருப்பினும் தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இன்னொரு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.

‘ஒமிகிரான்’ புது வகை கொரோனா வைரஸ்

தென்னாப்பிரிக்கா, போஸ்ட்வானில் கண்டறியப்பட்டுள்ள இந்த புது வகை வைரஸ் ‘ஒமிகிரான்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கும் அடங்காமல் வெகு வேகமாக பரவி தன் வேலையே காட்டும் இந்த கொடிய வைரஸ் முதல் 2 வைரஸ்களை காட்டிலும் 10 மடங்கு வீரியம் கொண்டது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது உலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒமிகிரான்’ – பங்கு சந்தையில் எதிரொலி

இந்த புதிய வைரஸ் தாக்குதல் அச்சத்தில் உள்ள பல நாடுகள் மீண்டும் ஊரடங்கு விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் FII தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகிறது. இது போன்ற காரணங்களும் பங்கு சந்தையின் சரிவுக்கு வழிவகுத்துள்ளது என்றே அறியலாம்.