பொருளாதார நிபுணர்கள் கருத்துப்படி அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு அதிக அளவில் வெளியே செல்வது சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்து பிப் 7ம் தேதி வாரத்தின் முதல் நாள் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 17200 புள்ளிகளை எட்டியது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 1024 புள்ளிகளை இழந்து 58000 புள்ளிகளுக்கு கீழ் இறங்கியது.

வங்கிகள் மற்றும் நிதித்துறையை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் பங்கு சந்தைகள் 7ம் தேதி அன்று கடும் சரிவை சந்தித்தன என்ற கருத்தும் நிலவிவருகிறது.

ஏற்ற இறக்கத்தில் இருக்கும் சென்செக்ஸ் பிரிவு நிறுவனங்கள்

சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனத்தின் பங்குகள் அதன் விலையின் கடும் சரிவை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வெறும் 5 நிறுவனத்தின் பங்குகளின் விலை மட்டுமே ஏற்றத்தை சந்தித்தன.

ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டம்

ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டம் 7ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களின் திடீர் மறைவு காரணாமாக மஹாராஷ்டிரா அரசு 7ம் தேதி அன்று விடுமுறை அறிவித்தது. ஆகவே இந்த பணக்கொள்கை கூட்டம் செவ்வாய் அன்று 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணக்கொள்கை கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு முதலீட்டாளர்கள் பலரும் சந்தையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர். இருப்பினும் பங்குகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றதால் சந்தை நிலவரம் இறங்குமுகத்தில் இருந்தது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.