TVS மோட்டாா் நிறுவனத்தினுடைய நவம்பா் மாத விற்பனை ஆனது 21% அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், TVS நிறுவனம் கடந்த நவம்பா் மாதம் மட்டும் 3,22,709 வாகனங்களை ஒட்டு மொத்தமாக விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளது. இது, கடந்த ஆண்டு நவம்பர் மாத கால கட்டத்தின் விற்பனையான 2,66,582 வாகனங்களுடன் ஒப்பிட்டு பார்கையில் 21% அதிகம் ஆகும்.

இந்த நிறுவனத்தினுடைய ஒட்டு மொத்த இருசக்கர வாகனத்தின் விற்பனை ஆனது கடந்த நவம்பர் மாதத்தில் 2,49,350 என்னும் எண்ணிக்கையில் இருந்து 25% வளா்ச்சி பெற்று 3,11,519 ஆக ஆனது. மேலும், உள்நாட்டு சந்தையில் இரு சக்கர வாகனத்தின் விற்பனை ஆனது 1,91,222-ல் இருந்து 30% வளா்ச்சி பெற்று 2,47,789 ஆக இருந்தது.

இந்நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள் விற்பனை ஆனது கடந்த நவம்பர் மாதத்தில் 26% உயா்ந்து 1,05,963-ல் இருந்து 1,33,531 ஆக ஆனது. அதே போல் இந்த நிறுவனத்தினுடைய ஸ்கூட்டா் விற்பனை ஆனது 26% உயா்ந்து 84,169-ல் இருந்து 1,06,196 ஆக ஆனது.

மேலும், இந்நிறுவனத்தின் 3 சக்கர வாகனத்தைப் பொருத்தவரை, கடந்த நவம்பர் மாதத்தில் இதன் விற்பனை ஆனது 17,232-ல் இருந்து 11,190 ஆக சரிவடைந்து உள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தினுடைய ஏற்றுமதி ஆனது 74,074 வாகனங்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 74,060 ஆக காணப்பட்டது என்று TVS மோட்டாா் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Author – Gurusanjeev Sivakumar