பாரம்பரிய அரசி, பாரம்பரிய அரிசி என்று இப்போதெல்லாம் நம் காதுகளில் அடிக்கடி விழுந்து கொண்டே இருக்கிறது. அதுபற்றி நாமும் கொஞ்சம் பார்க்கலாமே. சில விஷயங்களை நாம் கேள்விப்படுகிறோம். அதன் பொருளையும், தனித்துவத்தையும் உணர்கிறோம் ஆனால் ஏனோ அனைவரும் அதை உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வதில்லை.

அவ்வாறு ஒரு அறிய விஷயம் தான் நம் இந்திய பாரம்பரியத்தின் பெருமைக்குரிய அரிசிகள். நம் மூதாதையர் பல்வேறு விதமான அரிசி வகைகளை உணவு பழக்கமாக வைத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் இன்றைக்கு இருப்பது போல் கொலஸ்ட்ரால், டயாபடீஸ் என்றெல்லாம் நோய்கள் அறியாதவர்களாக இருந்தனர். காரணம் அவர்கள் உட்கொண்ட அரிசி வகைகள் அவ்வளவு சக்தியையும், வலிமையையும் அவர்களுக்கு கொடுத்து வந்தன.

இந்த அரிசிகளின் மகத்துவம் உணர்ந்த கோவையை சேர்ந்த குமரன் தம்பதியினர் பல காலமாக தங்கள் பயன்பாட்டுக்கு அரிசியை நேரடியாக விவசாயிகளிடம் இருந்தே வாங்கி வருகின்றனர். பிறகு தான் இந்த பயனை அனைவருக்கும் நல்க விரும்பி, தனது வில்வா அக்ரோ விற்பனை மையத்தில் பாரம்பரிய அரிசி விற்பனையை துவக்கினர். இவர்கள் தங்கள் சொந்த விவசாய பூமியில் 15க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பாரம்பரிய நெற்கதிர்களை வாங்கி பாதுகாக்கவும் ஆயத்தமாகி வருகின்றார்கள்.

பாரம்பரிய அரிசி உபயோகிப்பதில் மக்களுக்கு ஏன் தயக்கம்

பொதுவாக மக்களுக்கு இருக்கும் மூன்று அச்சம் – ஆர்கானிக், பாரம்பரிய உணவு, சிறுதானியம் போன்றவை சத்துக்கள் இருந்தாலும் அவற்றின் ருசி மாறுபடும், அவற்றின் நிறம் அவ்வளவாக ஏற்புடையதாக இருக்காது, மேலும் அவை விலை உயர்ந்தவையாக இருக்கும். தினசரி பயன்படுத்தும்போது பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்குமா என்பது தான். அதற்கும் பதில் அளிக்கும் வகைகள் ஹைபிரிட் அரிசியின் விலையை ஏறத்தாழ ஒத்தே இருக்கும்படி பாரம்பரிய அரிசி வகைகளை தமது வில்வா அக்ரோவில் விற்பனை செய்கின்றனர் இந்த தம்பதியினர். ரூ.85 முதல் அரிசி வகைகள் இங்கு கிடைக்கிறது.

துவக்கத்தில் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்து வந்தது வில்வா நிறுவனம், வாடிக்கையாளருக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து இப்போது இந்த பாரம்பரிய அரிசி விற்பனையை துவக்கியுள்ளனர் என்று தெரிகிறது.

வில்வா அக்ரோவில் கிடைக்கும் அரிசி வகைகள்

அண்டைய மாநிலங்களில் சிறப்பு பெற்ற அரசி வகைகள் பலவும் இந்த வில்வா அங்காடியில் கிடைக்கிறது. கேரளா முல்லன் கைமா, அசாம் ஜோஹா, கர்நாடக ராஜமுடி, டெஹ்ராடூன் பாஸ்மதி, பீகார் காதர்னி ஆகியவை அதில் அடங்கும். நம் தமிழகத்தின் அரிசிகளான இலுப்பை பூ சம்பா, தூயமல்லி, பூங்கார், கைக்குத்தல் அரிசி, குழியடிச்சான், காட்டுயானம், வெள்ளை மிளகு சம்பா, சீரக சம்பா, துளசி வாசனை சீரகா சம்பா என்று சுமார் 40க்கும் மேல் உள்ளன. அதுமட்டுமல்லாது பிரியாணி, புலாவ் ஆகியவை செய்ய பாஸ்மதி, சீரக சம்பா அரிசிகளை பின்னுக்கு தள்ளும் மிகவும் நறுமணம் கொண்ட அரிசி வகைகளையும் இவர்கள் விற்பனை செய்கின்றனர்.

“ஜீரோ-வேஸ்ட்” அங்காடி.

தங்கள் அங்காடியின் வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் வைக்கின்ற ஒரு உத்தமமான கோரிக்கை, பொருட்களை வாங்க வரும்போது பருத்தி பைகளை உடன் எடுத்து வாருங்கள் என்பதே. ஏனெனில் இவர்கள் நடத்துவது “ஜீரோ-வேஸ்ட்” அங்காடி. அதாவது சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, தேவையற்ற வீணடிப்புகளை தவிர்க்க பிளாஸ்டிக் பைகள் முழுவதும் தவிர்க்கப்பட்டுள்ளன.

மக்களே, ஹைபிரிட் அரிசிகள், நல்ல வெள்ளை நிறம் வர வேண்டும் என்பதற்காக பிராசசிங் செய்யப்பட்ட அரிசிகளையே இன்று நாம் உணவாக உட்கொள்கின்றோம். நாளுக்கு ஒரு புதிய நோய்களையும் சம்பாதித்துக்கொள்கிறோம். சற்றே சிந்தித்து நம் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களை நாமும் கடைபிடிப்போம். குமரன் தம்பதியினர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.