மத்திய அமைச்சரவை, செமிகண்டக்டர் உற்பத்தி செய்ய ரூ.76000 கோடி ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் இந்த முடிவை பல்வேறு தொழில் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

அரசின் இந்த முடிவை வரவேற்றிருக்கும் இந்தியா எனர்ஜி ஸ்டோரேஜ் அலையன்ஸ் நிறுவன CEO & தலைவருமான K. கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “அரசாங்கம் அறிவித்துள்ள செமிகண்டக்டர் உற்பத்தி ஊக்கத்திட்டம் மற்றும் சலுகைகள் தொழில்துறை குறித்த தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட முடிவு. மேலும் இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளவில் நிச்சயம் முதலிடம் பெரும். வடிவமைப்பதில் மட்டுமல்லாது தயாரிப்பிலும் வரும் வருடங்களில் தனது முன்னணியை தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறினார்.

இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்கள் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப்களை அமைப்பதற்கான திட்டம், தகுதி மற்றும் தொழில்நுட்ப திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு பாரி-பாசு அடிப்படையில் திட்டச் செலவில் 50% வரை நிதியுதவி அளிக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட யூனிட்களுக்கு மூலதன செலவில் 30% நிதிஉதவி

இத்திட்டம் தொடர்பாக இந்திய அரசாங்கம் மாநில அரசுடன் இணைந்து செயலாற்றும். உயர்தர அடிப்படையில் கிளஸ்டர் நிறுவுவதற்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளான நிலம், செமிகண்டக்டர் தர நீர், உயர்தர மின்சாரம், தளவாடங்கள் மற்றும் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் ஆகிய அனைத்துடனும் இந்திய அரசு தன முழு ஒத்துழைப்பை வழங்கும். இது தவிர, காம்பௌண்ட் செமிகண்டக்டர், சிலிக்கான் ஃபோடோனிக்ஸ், சென்சார்ஸ் ஃபேப்ஸ் மற்றும் செமிகண்டக்டர் ATMP / OSAT வசதிகள் ஆகியவற்றை இந்தியாவில் நிறுவ ஆகும் மூலதனச்செலவில் 30% நிதி அங்கீகரிக்கப்பட்ட்ட யூனிட்களுக்கு வழங்கப்படும்.

பொறியாளர்களுக்கு பயனளிக்கும் C2S – சிப்ஸ் டு ஸ்டார்ட்அப் திட்டம்

C2S – சிப்ஸ் டு ஸ்டார்ட்அப் திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்துள்ளது, இதன் மூலம் 85000 பொறியளர்களுக்கு செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.