ட்விட்டர் CEO ஜாக் டார்சி அவர் இணைந்து நிறுவிய சமூக ஊடக தளத்தின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக திங்களன்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது.

புதிய CEO பராக் அகர்வால் – ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பராக் அகர்வால் உடனடியாக தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் போர்டு உறுப்பினரும் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் ஆவார். அதே சமயம் ஜாக் டார்சி அவரது பதவிக்காலம் முடியும் வரை குழுவில் பங்குதாரர்கள் கூட்டத்தில் உறுப்பினராக தொடர்வார் என்றும் நிறுவனம் அறிவித்தது.

பராக்கிற்கு வாழ்த்து கூறும் ஜாக் டார்சி

ஜாக் டார்சி கூறுகையில் “இந்நிறுவனம் அதன் நிறுவனர்களிடமிருந்து இப்போது மேலே செல்லத் தயாராக உள்ளது . ஆகையால் நான் ட்விட்டரை விட்டு வெளியேற வெளியேற முடிவு செய்துள்ளேன் என்றார். மேலும் இப்போது தலைமை பொறுப்பேற்றிருக்கும் பராக் மீது தனக்கிருக்கும் நம்பிக்கை மிகவும் ஆழமானது என்றும், கடந்த 10 ஆண்டுகளாக அவர் ஆற்றிய ஆத்மார்த்தமான பணியே அவரின் இந்த மாற்றத்திற்கு காரணம். இது அவர் தலைமை ஏற்க வேண்டிய நேரம் என்றும்” குறிப்பிட்டார்.

ஒரே சமயத்தில் 2 பொது நிறுவனங்களின் தலைமை

டிஜிட்டல் கட்டண நிறுவனமான ஸ்கொயர் டார்சிக்கு உரியது. அதில் அவர் CEO பதவியை தொடர்ந்து வகிப்பார். ஒரே சமயத்தில் $5 பில்லியன்களுக்கும் அதிகமான சந்தை மதிப்புடைய இரண்டு பொது நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஒரே நபர் டார்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.