ஸ்பைஸ்எக்ஸ்பிரஸ் ட்ரோன் சேவையை பயன்படுத்தி தொலைதூர பகுதிகளுக்கும் மருத்துவ அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது. இதற்குரிய சோதனை நடத்துவதற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) ஒப்புதலை ஸ்பைஸ்ஜெட் கடந்த ஆண்டு 2020, மே மாதம் பெற்றது. எவ்வித தடையும் இல்லாத ஒரு விநியோகச் சங்கிலியை ஏற்படுத்தும்போது தன் லாஜிஸ்டிக்ஸ் தளம் விரிவடையும் என்று ஸ்பைஸ்ஜ்ட் நம்புகிறது.

துவக்கத்தில் 0-5 கிலோ, 5-10 கிலோ மற்றும் 10-25 கிலோ என்று வெவ்வேறு எடைகள் கொண்ட ட்ரோன்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்பைஸ்ஜெட்டின் விநியோகத்திட்டம்

10 மாவட்டங்கள் 150 இடங்கள் மாதத்தில் 25000 விநியோகம் என்பதை தனது நோக்கமாக கொண்டுள்ளது ஸ்பைஸ்ஜெட். “நாடு முழுவதும் பிரத்தியேக ட்ரோன் துறைமுகங்கள் நிறுவப்பட்டு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இச்சேவை கொண்டு செல்லப்படும். ஸ்பைஸ்ஜ்ட் இன்னும் பல புதிய உத்திகளை ஆராய்ந்து புதிய தொழில்நுட்பங்களை உபயோகித்து ட்ரோன் சேவையை வெகு விரைவில் அறிமுகப்படுத்தும்” என்று ஒரு செய்தியில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.