வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், 2022-ஆம் ஆண்டுக்கான இந்திய வர்த்தக வகைப்பாடு (ஹார்மோனிஸ்டு சிஸ்டம்) புதன்கிழமை அறிவித்தது. இது வெளிநாட்டிலிருந்து ட்ரோன்கள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ட்ரோன்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தது.

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே ட்ரோன் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் ட்ரோன் தயாரிப்புக்கு பல சலுகைகளை அளித்துள்ளது மத்திய அரசு. இப்போது இறக்குமதி தடை செய்யப்படுவதால் இந்தியாவில் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பது மேம்படுத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சம்பந்தமாக ட்ரோன்கள் இறக்குமதி செய்ய அந்நிய வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் ஒப்புதல் அவசியம்

ஆர் & டி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு விதிவிலக்குகள் வழங்கப்பட்டாலும், இந்த நோக்கங்களுக்காக ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு “உரிய அனுமதிகள்” தேவைப்படும். அந்நிய வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் உள்நாட்டில் டிரோன்களின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யலாம்.

ட்ரோன் இறக்குமதிக்கு தடை விதித்தாலும் மூலதன பொருட்களை அனுமதியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் அனைத்து பாகங்களையும் இறக்குமதி செய்து, ஒருங்கிணைத்து ட்ரோன் செய்ய அனுமதி இல்லை.

ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு – ட்ரோன்கள் உதிரிபாகங்களை உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை

இந்திய அரசு அமைச்சகம் தாராளமயமாக்கப்பட்ட ட்ரோன் விதிகளை சென்ற ஆண்டு அறிவித்தது. மூன்று நிதியாண்டுகளுக்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீட்டில் ட்ரோன்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களுக்கான உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

ட்ரோன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சில முன்னணி நிறுவனங்கள் அரசின் இந்த அறிவிப்பால் நல்ல தொழில் முன்னேற்றம் பெறலாம் மேலும் இதன் பங்குதாரர்கள் சிறந்த பலனடைய வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. அந்நிறுவனங்கள் பாராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஜென் டெக்னாலஜிஸ், ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் ஆகியவை.