லண்டனை தலைமையிடமாக செயல்பட்டு வரும் பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒவ்வொரு வருடமும் உலக அளவில் மதிப்பு மிக்க நிறுவனங்களை மதிப்பீடு செய்து அதன் பட்டியலை வெளியிட்டு வருகிறது இந்த கன்சல்டன்சி நிறுவனம். அப்படி சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட தகவல் இந்தியாவை தலை நிமிரச்செய்திருக்கிறது. ஆம், 2022-ம் ஆண்டில் உலகளவில் மிகச்சிறந்த ஐடி நிறுவனங்கள் என 25 நிறுவனங்களை பட்டியல் செய்திருக்கும் சமயத்தில் அமெரிக்காவின் IBM நிறுவனத்தை முந்தி இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது இந்தியாவின் டாடா கன்சல்டன்சி நிறுவனம் (TCS). டாடா குழுமத்துக்கு புதிய வருட துவக்கத்தில் கிடைத்த மிகச்சிறந்த நற்செய்தி இது.

TCS-ன் வளர்ச்சி மதிப்பீடு பற்றி சிறு கண்ணோட்டம்

2020-ம் ஆண்டு முதல் இது வரையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி 24% எனவும், கடந்த ஆண்டுக்கும் இப்போதைக்கு 12% வளர்ச்சியையும் எட்டியுள்ளது TCS. மேலும் இந்நிறுவனத்தின் மார்க்கட் கேப்பிடல் 16.8 பில்லியன் டாலர்கள்.

முன்னணியில் இடம்பெற்றுள்ள பிற ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் இருப்பது அசென்சர், இரண்டாம் இடத்தில் இப்போது TCS, மூன்றாம் இடத்தில் மற்றொரு இந்திய நிறுவனம் இன்போசிஸ், நான்காம் இடத்தில் IBM. இந்திய ஐடி நிறுவனங்கள் பலவும் உலக அளவில் மதிப்பு மிக்கவையாகவே இருந்து வருகின்றன என்பதற்கு இந்த பட்டியல் ஒரு மிகச்சிறந்த சான்று. அந்த பட்டியலில் இடம் பெரும் மேலும் சில இந்திய ஐடி நிறுவனங்கள் விப்ரோ, டெக் மகிந்திரா, HCL, LTI போன்றவை, இவையும் முதல் 25 இடங்களுக்குள் உள்ளன.

TCS மற்றும் இந்திய ஐடி நிறுவனங்கள் பற்றி பிராண்ட் ஃபைனான்ஸ் கருத்து கணிப்பு

பேண்டமிக் காலகட்டத்தின் பொது பல போராட்டங்கள் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் திறமையாக கையாண்டு வெற்றியை தனதாக்கியுள்ளது TCS நிறுவனம். பல்வேறு விளையாட்டுகளுக்கும் தன் நிறுவன ஸ்பான்சர்ஷிப் அளித்ததன் மூலம் தனது வர்த்தக செயல்பாடுகளை விஸ்தீரணம் செய்து டாடாவின் பிராண்ட் இமேஜை நன்கு வலுப்படுத்திக்கொண்டது. இது வணிகத்தின் மிகச்சிறந்த உத்தி.

TCS மட்டுமல்லாது இன்னும் பிற நிறுவனங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்தியா ஐடி துறையில் மிகச்சிறந்த அடையாளத்தை நிச்சயம் தனதாக்கி கொள்ளும். செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிடிக்ஸ், IOT போன்ற ஐடி சேவைகளில் தனி ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ளும் என்றும் பிராண்ட் ஃபைனான்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.