திவாலான ஜவுளி நிறுவனமான சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த ஏலம் கோரிய நிறுவனங்களில் பல நிறுவனங்களுள் முகேஷ் அம்பானி தலைமையிலான Reliance Industries Ltd. (RIL)-ம் அடங்கும். RIL, அசெட்ஸ் கேர் & ரீகன்ஸ்ட்ரக்ஷன் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்து இந்த ஏலத்தில் பங்கெடுத்தது. இந்த செயல்முறை யாவும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட திவால்நிலைத் தீர்வு செயல்முறையின் படி நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்ற பிற நிறுவனங்கள் GHCL லிமிடெட்., ஈஸிகோ டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட்., மற்றும் ஹிமத்சிங்கா வென்ச்சர்ஸ் பிரை

“இதில் பெறப்பட்டுள்ள தீர்மானங்கள் யாவும் இடைக்காலத் தீர்மான நிபுணர்களால் (Interim Resolution Professional) மதிப்பீடு செய்யப்பட்டு பின் கடன் வழங்குபவர் கமிட்டி முன் மேல் பரிசீலனைக்காக வைக்கப்படும்.” என்று இந்த ஏலம் பற்றி சின்டெக்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

2ம் முறையாக திவாலான நிறுவனத்தை ஏலம் எடுக்கும் ரிலையன்ஸ்

திவாலான நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் தலைமையில் RIL ஏலத்தில் எடுப்பது இது 2வது முறையாகும். டீசல், அர்மானி, பர்பெர்ரி மற்றும் ஹ்யூகோ பாஸ் உள்ளிட்ட பல முன்னணி உலகளாவிய ஃபேஷன் பிராண்டுகளுக்கு சின்டெக்ஸ் நிறுவனம் துணிகளை சப்ளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RIL உருவாக்கியுள்ள பிரபல சர்வதேச பிராண்டுகளுடன் கூட்டணி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பற்றி இன்னுமொரு ருசிகரமான தகவல், இந்த சில வருடங்களில் பிரபல ஆடம்பர சர்வதேச நிறுவனங்களான டிஃப்பானி & கோ, பர்பெர்ரி குழுமம், ஹ்யூகோ பாஸ் ஏஜி ஆகியவை உட்பட பல நிறுவனங்களுடன் கூட்டணிகளை உருவாக்கியுள்ளது. மேலும் மார்கியூ பாலிவுட் பிராண்டுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைப் பெறுதல் போன்றவற்றையும் உடன் செய்து வருகிறது RIL.