TRP RATING கணக்கிடும் BARC அமைப்பு ரேட்டிங்கை மூன்று மாதத்திற்கு நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. அதேச போல், செய்தி சேனல்களுடைய பார்வையாளர்கள் தொடர்பான தகவல்கள் மட்டும் வெளியிடப்படும் எனவும் தனித்தனி சேனல்களுடைய பார்வையாளார்களின் எண்ணிக்கையானது வெளியிடப்படாது என தெரிவித்துள்ளது.

மேலும், சில நாட்ககளுக்கு முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை மையமாக கொண்டு இயங்கி வந்த சில செய்தி சேனல்கள் TRP முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் பார்வையாளர்கள் மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சில செய்தி சேனல்கள் தங்களுடைய சேனல்களை எல்லா நேரமும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் எனக் கூறி மாதத்திற்கு ரூ.400 முதல் ரூ.700 வரை வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

TRP என்பது ஒரு தொலைக்காட்சியில் பார்வையாளர்கள் தொடர்பான மதிப்பீட்டு முறை ஆகும். இந்த முறையின் படி, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது எந்த சேனல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றது என்பதை மதிப்பிடுவதற்காக டிவியில் ஒரு மீட்டர் பொருத்தப்படும்.

எனவே, விளம்பர நிறுவனங்கள் இந்த மதிப்பீட்டினைப் பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சிக்கு விளம்பரங்களை தருகின்றனர். இந்த மதிப்பீட்டை பொருத்து தான் செய்தி சேனல்கள் வருவாய் ஈட்டுகின்றது.

2014-ம் ஆண்டு , தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு கொள்கை வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, ஜூலை 2015-ம் ஆண்டு, இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீடுகளை வழங்கக்கூடிய அமைப்பாக BARC அமைப்பு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. சேகரிக்கப்பட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்து ஒவ்வொரு வாரமும் BARC அமைப்பு TRP RATING வெளியிடுகிறது.

Author – Gurusanjeev Sivakumar