நாட்டின் ஏற்றுமதி ஆனது நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் 2.1 லட்சம் கோடி ரூபாய் ஆக உயர்ந்து உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி அதிகரிப்பு:

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டு உள்ள புதிய புள்ளி விவரத்தில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஏற்றுமதி ஆனது 5.27 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்திய நாட்டின் ஏற்றுமதி ஆனது ரூ.2.1 லட்சம் கோடி ஆக அதிகரித்து உள்ளது.

அரிசி, இரும்புத்தாது உள்ளிட்ட முக்கியமான பொருட்களுடைய ஏற்றுமதி ஆனது வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், அரிசி 92 சதவீதமும், இரும்புத்தாது 109 சதவீதமும் உயர்ந்து உள்ளதாக தெரிவித்து உள்ளது மத்திய அரசு.

அதுமட்டுமின்றி பால், இறைச்சி, பருத்தி, ரசாயனம் புகையிலை, ஆகிய பொருட்களுடைய ஏற்றுமதியும் அதிகரித்து உள்ளன.

மேலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் எண்ணெய் இறக்குமதி ஆனது 35 சதவீதம் குறைந்து ரூ.44,000 கோடி ஆக உள்ளது. எண்ணெய் சாராத பொருட்களின் இறக்குமதியானதும் 14 சதவீதம் சரிந்து, ஒரு ரூ.1.88 லட்சம் கோடி ஆக உள்ளது.

தங்கத்தின் இறக்குமதியும் 52 சதவீதமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது…!

Author – Gurusanjeev Sivakumar