தலைநகரம் சென்னையை சேர்ந்த கெமிக்கல்ஸ் வர்த்தக நிறுவனமான ராம் சரண் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் துறையில் தீவிர கவனம் செலுத்துகிறது, இந்த நிறுவனத்தின் 46% பங்குகளை, 31480 கோடி ரூபாய்க்கு, அமெரிக்காவை சேர்ந்த ‘TFCC இன்டர்நேஷனல்’ நிறுவனம் வாங்க உள்ளது. அதே சமயம் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கானாவை தளமாகக்கொண்ட மஸ்ரி நிறுவனத்திடமிருந்து எரிசக்தி யூனிட்களுக்கு கழிவுகளை சப்ளை செய்ய ஆர்டர் பெற்றுள்ளது ராம் சரண் கம்பெனி. இதைக்கொண்டு ஆப்பிரிக்க நாட்டில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபோகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

இரசாயனத் துறையில் மிக முக்கியமானதும் பெரியதுமான ஒப்பந்தம்

இரசாயனங்கள் துறையில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்களிலேயே இந்த ஒப்பந்தம் தான் மிகப்பெரியது என்றும் நாடு முழுவதும் இந்த துறையில் செய்யப்பட்ட தனியார் பங்கு ஒப்பந்தங்களில் இதுவே அதிகமானது என்றும் கூறப்படுகிறது. TFCC-யின் இந்த முதலீடு புதிய ஆற்றல் மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதற்கும், அதிக சேமிப்பு திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களை தயாரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என்றும் தெரிகிறது.

ராம் சரண் நிறுவனத்தின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நிர்வாகம் கருத்து

இந்நிறுவனம் இப்போது 3-ம் தலைமுறையான திவ்யேஷ் மற்றும் கௌஷிக் பாலிச்சா என்ற இருவர் தலைமையில் செயல்பட்டுவருகிறது. “கானாவில் அடுத்த 2 ஆண்டுகளில் யூனிட்களை நிறுவுவதன் மூலம் சப்ளையை அடுத்த வருடம் 2022 நவம்பர் மாதத்தில் துவங்கலாம் என்றும், எரிசக்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கழிவுகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் விநியோகம் “என்டைடி ஒன்’ என்ற பிராண்ட் பெயரில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், ஒரு பெரிய தொகையில் எரிபொருளுக்கு கழிவுகள் சப்ளை செய்வதற்கான எங்கள் முதல் ஒப்பந்தம் இது, எந்த ஒரு மிகுதியையும் விட்டு வைக்காமல் கழிவுகளை ஆற்றலாகச் செயலாக்கம் செய்யும் எங்கள் நோக்கத்தை நிச்சயம் இந்த ப்ராஜக்ட் வெற்றிகரமாக செய்து முடிக்கும்” என்று கூறினார் பாலிச்சா.