மருத்துவ துறைகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிப்லா நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் முடிவுபெற்ற இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தினுடைய ஒருங்கிணைந்த நிகரலாபம் ஆனது 41.18% ஆக அதிகரித்து ரூ.665.43 கோடி ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மும்பையை தலைமை இடமாகக் கொண்டுள்ள சிப்லா மருந்து நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.471.35 கோடி வரை லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தினுடைய மொத்த செயல்பாட்டு வருவாய் ஆனது 14.62% ஏற்றம் கண்டு ரூ.5,038.29 கோடி ஆக அதிகரித்து உள்ளது. இதுவே, கடந்த ஆண்டில் ரூ.4,395.78 கோடி ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வர்த்தகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 17% அதிகரித்தும், மேலும், கடந்த காலாண்டு உடன் ஒப்பிட்டு பார்க்கையில் 33% ஆனது அதிகரித்து காணப்படுகிறது. கோவிட்-19 தொற்றின் காரணத்தினால் இந்த ஆண்டில் சேவைத் துறை ஆனது சற்று வலுவான வளர்ச்சியைக் பெற்றுள்ள நிலையில், தற்போது, சில மருந்து நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மேலும், இந்நிறுவனத்தினுடைய செப்டம்பர் காலாண்டு முடிவுகள் தொடர்பாக, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், குளோபல் தலைமை செயல் அதிகாரியான உமங் வோஹ்ரா என்பவர் கூறுகையில், இவை சந்தையில் வலுவான தேவையை பிரதிபலிக்கிறது என்றும் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மற்ற சர்வதேச சந்தையில் சற்று வலுவாக வளர்ச்சியினுடைய வேகத்தினை தக்க வைத்துக் கொண்டது.

மேலும், உலகளாவிய விற்பனையினை விரிவுபடுத்துவதற்கு அவர்கள் முதலீட்டை தொடர்ந்து செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Author – Gurusanjeev Sivakumar