இந்தியாவின் பாசுமதி ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 20% சரிந்து 4 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் அதாவது 2017 க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த ஏற்றுமதி மதிப்பு இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் இந்தியாவில் உற்பத்தி ஆகும் பாசுமதி அரிசியை அதிகம் கொள்முதல் செய்யம் நாடு ஈரான். இப்போது அதன் ரூபாய் கையிருப்பு குறைந்துவிட்டுள்ளது. அதனால் இறக்குமதியை தற்போது அந்நாடு குறைத்துள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதையே தொழில்துறை அதிகாரிகளும் ஆமோதித்துள்ளனர். ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட 26% ஏற்றுமதி குறைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்திய வங்கிகளுடனான ரூபாய் கையிருப்பு குறைந்து போன பிறகு ஈரான் கடந்த ஆண்டு சில மாதங்களாக சந்தையில் செயல்படவில்லை” என்று மும்பையைச் சேர்ந்த உலகளாவிய வர்த்தக நிறுவனத்தின் டீலர் கூறினார்.

ஈரான் இந்தியாவுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தப்படி விவசாயப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்கள் இறக்குமதிக்கு ஈடாக ஈரான் எண்ணெயை விற்க ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவின் தடைகள் காலாவதியான பிறகு, மே 2019-ல் இந்தியா டெஹ்ரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு டெஹ்ரான் அதன் ரூபாயை தொடர்ந்து பயன்படுத்தியது, ஆனால் கச்சா விற்பனை இல்லாமல், ஈரானின் ரூபாய் கையிருப்பும் குறைந்தது.

அரிசி ஏற்றுமதி செய்வதில் இந்திய உலகளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாசுமதி அல்லாத அரிசியை ஆப்பிரிக்க நாடுகளுக்கும், முதல் தரமான பாசுமதி அரிசியை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா. வங்காளதேசம், சீனா மற்றும் வியட்நாம் ஆகியவை கொள்முதலை அதிகரித்ததால், நாட்டின் மொத்த அரிசி ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 46% உயர்ந்தது.

ஓராண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் பாசுமதி அரிசி உற்பத்தி 15% குறைவாக இருந்தது. குறைந்த பரப்பளவு, அறுவடை காலத்தில் எதிர்பார்த்த மழை இல்லாமல் இருந்தது ஆகிய காரணங்களால் உற்பத்தி குறைந்தது. உற்பத்தி குறைந்ததால் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி விலை 20% அதிகரித்துள்ளது என்றும், அதே சமயம் பிப்ரவரி , மார்ச் மாத ஏற்றுமதிக்கான தேவை இன்னும் வலுவாக உள்ளது என்றும் செட்டியா கூறினார்.