புதிய கிரிப்டோ மசோதா அமைச்சரவை ஒப்புதலுக்கு தாக்குதல் செய்யப்படும் முன்பு இருந்த கிரிப்டோகரன்சி மசோதா மறுவேலை செய்யப்பட்டு புதிய மசோதா அமைச்சரவை ஒப்புதலுக்கு தாக்குதல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்

மத்தியில் உள்ள மோடி அரசு விரைவில் புதிய கிரிப்டோகரன்சி மசோதாவை அறிமுகம் செய்து அதை அமைச்சரவை ஒப்புதலுக்கு தாக்கல் செய்யும். அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டபின் புதிய கிரிப்டோகரன்சிக்கான மசோதா தாக்கல் செய்யப்படும். முன்பு இருந்த மசோதா மறுவேலை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை கடந்த நவம்பர் 30ம் தேதியன்று நாடாளுமன்ற மேலவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கிரிப்டோ முதலீடு – பொதுமக்களுக்கு விழிப்புணர்வு & எச்சரிக்கை

மேலும் அவர் கூறுகையில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைவருக்கும் பொதுவாக எச்சரிக்கை மற்றும் விழுப்புணர்வு பிரச்சாரங்களை அரசு செய்து வருகிறது. பொதுமக்கள் இது பற்றி உணரச்செய்ய பல முயற்சிகளை இன்னும் மேற்கொள்ளலாம். கிரிப்டோகரன்சிகள் நாட்டில் விரும்பத்தகாத பல விஷயங்கள் ஏற்பட வழிவகை செய்யக்கூடியதாக இருக்கும் என்பதால் அதனை பற்றிய விஷயங்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டு பல நிலைகளிலும் விவாதிக்கப்பட்டது. அதே சமயம் கிரிப்டோ பரிமாற்றங்களை தடை செய்வது குறித்து அரசு இதுவரை எதுவும் முடிவெடுக்கவில்லை என்றார்.

பாதிப்பில் இருந்து தப்பிக்கும் சில கிரிப்டோகரன்சிகள்

முழுமையான ஒழுங்குமுறை எதுவும் கட்டமைப்பில் இல்லாத மிகவும் கடினமான பகுதி இது. அதன் விளம்பரங்களை தடை செய்வது குறித்து முடிவுகள் எதுவும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை. RBI மற்றும் SEBI ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் கிரிப்டோகரன்சி என்ற துறைச்சொற்கள் பற்றி மத்திய அரசு இன்னும் எதையும் தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும் முன்னணியில் உள்ள பிட்காயின், ஈதர் என பொது பதிவேட்டில் செயல்படும் சில கிரிப்டோகரன்சிகளுக்கு பாதிப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.