கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஆனது டோஹோவிலுள்ள கத்தார் ஏர்வேஸை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்:

இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 125 நாடுகளுக்கு மேலாக தனது சேவையை வழங்கி வருகிறது. இப்படிபட்ட பெரிய விமான நிறுவனமானது, கடந்த மார்ச் காலாண்டு முடிவடைந்த நிலையில் நிதி ஆண்டில் (2019-20) 1.9 பில்லியன் டாலர்களை (7 பில்லியன் ரியால்) இழந்துள்ளதாக அறிவித்து உள்ளது.

இருப்பினும் உலகளாவிய வீழ்ச்சிக்கு இடையில் இந்த வீழ்ச்சியை சமாளிக்க, கத்தார் அரசாங்கத்திடமிருந்து (7.3 பில்லியன் ரியால்களை) பெற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 639 மில்லியன் டாலர்களை இழந்த நிலையில் இந்த கோவிட்-19 பரவல் காரணமாக, இதுவரை இல்லாத அளவில் இந்த நிதி ஆண்டில் பலத்த நஷ்டத்தை கண்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டுக்காண நிதி முடிவுகளும் சாதகமாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இந்த கோவிட்-19 தொற்று மட்டும் காரணமல்ல. மத்திய கிழக்கில் நடந்து கொண்டுள்ள பிரச்சனையும் கூட என தெரிவித்துள்ளார். கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், ஏர் இத்தாலி நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளையம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கத்தார் ஏர்வேஸ் ஆண்டு அறிக்கையில் நல்ல எண்களையும் கொண்டு உள்ளது. ஏனென்றால் மொத்த பயணிகளுடைய எண்ணிக்கையானது கிட்டதட்ட 10 சதவீதம் அதிகரித்து 32.4 மில்லியன் பயணிகள் ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar