எலான் மஸ்க்:

எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் அவர்களை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குறிப்பாக அவரின் டெஸ்லா கார் நிறுவனத்தினுடைய பங்குகளின் விலை ஆனது உயர்ந்துள்ளதை தொடர்ந்து அவரின் சொத்து மதிப்பு ஆனது 7.2 பில்லியன் டால்களிலிருந்து 128 பில்லின் டாலர்கள் ஆக உயர்ந்து உள்ளது.

சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக எலான் மஸ்க் உள்ளார்.

மேலும், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ஆனது உயர்ந்ததை தொடர்ந்து 2-வது இடத்திலிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அவர்கள் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளார்.

குறிப்பாக, டொயோட்டா, ஜெனரல் மோட்டர்ஸ் போன்ற நிறுவனங்களை விட குறைவான வாகனங்களைத் தயாரித்தாலும், உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனம் ஆக டெஸ்லா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினுடைய இணை நிறுவனர் பில்கேட்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியிலில் 2017 ஆம் ஆண்டு வரை முத இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பில்கேட்ஸை அவர்களை பின்னுக்கு தள்ளினார்.

பில்கேட்ஸின் சொத்து மதிப்பானது 127.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் தகவல் வெளிவந்து உள்ளது. குறிப்பாக, பில்கேட்ஸ் அவர்கள் தனது அறக்கட்டளைகளுக்கு தானம் அளிக்காமல் இருந்திருந்தால் சொத்து மதிப்பு ஆனது அதிகமாக இருந்திருக்கும். அதேபோலஸ் ஜெஃப்பின் சொத்து மதிப்பு ஆனது 182 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

Author – Gurusanjeev Sivakumar