இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் ஆனது வேகமாக வளர்ந்து வருகின்ற இந்நிலையில் அரசு மற்றும் பொதுச் சேவையிலும் தற்பொழுது அதிக அளவிலான டிஜிட்டல் சேவைகள் ஆனது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வகையில் சமையல் சிலிண்டரை இனி வாட்ஸ்அப் செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக எப்படிப் முன்பதிவு செய்வது என்பதை குறித்து பார்க்கலாம்.

டிஜிட்டல் சேவைகளின் மூலமாக மக்களின் வாழ்க்கை முறையானது மிகவும் எளிதான விசயமாக மாறி வருகின்றது. குறிப்பாக, கடந்த 5 முதல் 10 வருடத்திற்கு முன்பு வரையும் நம் ஊரில் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் 2 மணிநேரம் வரை வரிசையில் நின்று பணம் செலுத்த வேண்டும். ஆனால் இன்றோ 2 நிமிடத்திற்குள்ளாகவே நாம் இருக்கின்ற இடத்தில் இருந்தே பணத்தைச் செலுத்த முடியும்.

நம் மக்களுக்கு எளிமையான வழித்தடத்தை அமைத்து கொடுக்கும் நோக்கத்தில், அதிக அளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் எனவும் INDANE GAS, BHARAT GAS, HP GAS நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு செய்யும் தளத்தை அமைத்துக கொடுத்துள்ளார்கள்.

இன்டேன் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் வாட்ஸ்அப் மூலமாக சிலிண்டரை முன்பதிவு செய்ய ‘7588888824’ என்னும் எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணைப் உங்கள் போனில் பதிவு செய்துகொண்டு உங்கள் இன்டேன் கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணில் இருந்து ‘REFILL’ என டைப் செய்து அனுப்பி சிலிண்டரை பதிவு செய்யலாம்.

மேலும், இன்டேன் கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து IOC என்று டைப் செய்து > வாடிக்கையாளரினுடைய STD CODE, டிஸ்ட்ரிபியூட்டர் தொடர்பு எண் மற்றும் வாடிக்கையாளர் நுகர்வோர் எண் ஆகியவற்றைச் சேர்த்து. ‘7718955555’ மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும் பதிவு செய்யலாம்.

அதே போல, பாரத் கேஸ் முன்பதிவு செய்ய 1800224344 என்ற எண்ணை நீங்கள் உங்கள் போனில் சேமிக்க வேண்டும். பின்னர், நீங்கள் வாட்ஸ்அப்பிற்கு முன்பதிவு செய்த எண்ணிற்கு HI என்று ஒரு மெசேஜ் அனுப்பவும். பின்னர், உடனடியாக பதில் வரும். அதாவது இதற்காக வாட்ஸ்அப் நிறுவனத்தால் வரவேற்கப்படும்.

மேலும், நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய நினைக்கும் போது, உங்களின் பதிவு எண்ணை அனுப்பினால் மட்டும் போதுமானது அல்லது உங்கள் கேஸ் புத்தகத்தினுடைய புகைப்படத்தையும் அனுப்பலாம். பின்னர் நீங்கள் பதிவு செய்த ஆர்டர் விவரங்களைப் பெறுவீர்கள். அதாவது, எந்த நாளில் உங்களுக்கு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்ற தகவல் வரும்.

அதே போல். HP கேஸ் வாடிக்கையாளர்கள் ‘9222201122’ என்ற எண்ணை உங்கள் போனில் சேமித்துக்கொள்ள வேண்டும். சேமித்த பின்னர், வாட்ஸ்அப்பில் உங்கள் HP கேஸ் சிலிண்டர் புத்தகத்தினுடைய எண்ணை மெசேஜ் அனுப்பவும். பின்னர், ஆர்டர் விவரங்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும். இது சிலிண்டரினுடைய விநியோக தேதி உள்ளிட்ட விவரங்கள் ஆகும்.

Author – Gurusanjeev Sivakumar