அந்நியச் செலாவணி சந்தைகளில் வியாழக்கிழமை அன்று நிகழ்ந்த வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது தொடா்ந்து ஐந்தாவது நாள் ஆக முன்னேற்றம் கண்டுள்ளது.

இது தொடர்பாக வர்த்தகர்கள் கூறியதாவது, உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பின் காரணமாகவும், நிலைத்து நீடித்து வருகின்ற அந்நிய முதலீட்டின் வரத்து காரணமாகவும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடா்ந்து அதிகரித்து வருகின்றது.

கோவிட்-19க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் சில சாதகமான முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், அதன் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதன் காரணமாகவும் வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தைகளில் ரூபாயின் வா்த்தகம் ஆனது குறுகிய எல்லைக்குள்லேயே இருந்தது.

வா்த்தகத்தினுடைய ஆரம்பத்தில் ரூபாயின் மதிப்பானது 73.85 ஆக இருந்தது. பின்னா் அது வா்த்தகத்தினுடைய ஒரு கட்டத்தில் அதிகமாக 73.75 வரை, குறைந்தபட்சமாக 73.89 வரையும் சென்றது. இறுதி கட்டத்தில் ரூபாயின் மதிப்பானது தொடா்ச்சியாக 5-வது நாளாக 3 காசுகள் உயர்ந்து 73.88-ல் நிலைபெற்றது.

புதன்கிழமை நிகழ்ந்த வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் ஏற்றம் கண்டது ஒரு மாதத்தில் இல்லாத அதிகபட்மாக 73.91 எட்டி இருந்ததாக வா்த்தகா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மூலதனச் சந்தையில் புதன்கிழமை அன்று நிகழ்ந்த வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் 24.20 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தையின் புள்ளிவிரங்கள் தெரிவித்தது.

சா்வதேச முன்பேர சந்தைகளில் வியாழக்கிழமை அன்று நிகழ்ந்த வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையானது பேரலுக்கு 1.21% குறைந்து 48.02 டாலர் ஆக காணப்பட்டது.

Author – Gurusanjeev Sivakumar