இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீடானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8% சரிவை சந்தித்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை நேற்று (12-10-2020) அறிக்கை வெளியிட்டுள்ளது. சுரங்கம், மின் உற்பத்தி, சுரங்கம், தயாரிப்பு துறைகளின் செயல்பாடுகளானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் பின்னடைந்து காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தொழிலக உற்பத்தியானது 8% அளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த ஆண்டும் ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் இந்தியாவின் தொழிலக உற்பத்தி குறியீடானது 1.4% என்ற அளவில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தியானது 8.6 சதவீதமும், சுரங்கம் மற்றும் மின் துறையின் உற்பத்தியானது 9.8 சதவீதமும் மற்றும் 1.8 சதவீதமும் சரிந்துள்ளது.

இந்த கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆனது கொஞ்சம் கொஞ்சமாக தளா்த்தப்பட்டு வரும் இந்நிலையில், பல நிலைகளில் பொருளாதார நடவடிக்கைகளானது முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

அதே போல் புள்ளிவிவர தரவுகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் தாங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar