இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கோ ஃபர்ஸ்ட் (Go First) ஏர்லைன் நிறுவனம் அதிரடியாக தனது விமான கட்டணத்தை குறைத்து சலுகை விலையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த அதிரடி ஆஃபரின் என்ன தெரியுமா? கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் விமானத்தில் வெறும் 926 ரூபாய்க்கு பயணிக்கலாம்.


கொரோனா அச்சம் இன்னும் இருந்து வருவதால் நாட்டில் மாநிலங்களுக்கிடையே பயணிக்க கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டு வந்த நிலையில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பலவும் தம் சேவையை குறைப்பது, கட்டண விலையை குறைப்பது என்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தான் கோ ஃபர்ஸ்ட் (Go First) ஏர்லைன் நிறுவனம் குறைவான கட்டணத்தில் விமானப் பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

“Right to Fly” எனப்படும் இச்சலுகையின் கீழ் பயணிக்க ஜனவரி 26ஆம் தேதிக்குள் டிக்கெட் புக் செய்துவிட வேண்டும். குறிப்பாக, பிப்ரவரி 11 முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்துக்கும் விமான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். மேலும் ஒரு வழி பயணத்திற்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். அதே போல் சர்வதேச விமான சேவைக்கு இந்த கட்டண சலுகை பொருந்தாது.