உலகின் மிகப்பெரிய CLOUD COMPUTING நிறுவனமான அமேசான் WEB SERVICES நிறுவனம், தெலுங்கானவில் ரூ.20,761 கோடி மதிப்புடைய தரவு மையத்தினை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

தெலுங்கானாவில் வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டை, பெறுகின்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அமேசான் வெப் சர்வீஸ்:

மேலும், தெலுங்கானாவில் சில தரவு மையங்களை அமைப்பதற்காக, அமேசான் WEB SERVICES ரூ.207.61 பில்லியன் மதிப்புடைய முதலீட்டை இறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த திட்டம் ஆனது 2022-ம் ஆண்டு நடுத்தர காலகட்டத்தில் செயல்பாட்டுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதலீடு மூலமாக தெலுங்கானாவில் இந்நிறுவனம் மூன்று தரவு மையங்களை தொடங்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமேசானின் இத்தகைய அதிரடி திட்டத்தின் மூலம், பிற்காலத்தில் மேலும் பல நிறுவனங்கள் தெலுங்கானாவிலேயே தங்களின் தரவு மையத்தினை அமைப்பதற்கு ஏற்ற இடமாக மாற வாய்ப்புள்ளது.

இந்நிறுவனம் தெலுங்கானவை தேர்வு செய்ததற்கு மிக முக்கியமான காரணம் அங்கு வலுவான கட்டமைப்பு, மாநில அரசின் ஆதரவுகள் உட்பட பலவித காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா அரசு தொடங்கியது முதல் மாநில அரசு ஈர்த்துள்ள மிகப்பெரிய முதலீட்டில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar