பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பின் காரணமாக அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை (23/11/2020) (நேற்று) நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது ஐந்து காசுகள் உயா்ந்து கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவில் ஏற்றம் கண்டது.

குறிப்பாக, உள்நாட்டு பங்குச் சந்தையில் மிகவும் சாதகமான நிலை காணப்பட்டது. மேலும், உலகளவில் டாலருக்கான தேவையும் குறைந்து தான் காணப்பட்டது.

இது போன்ற பல காரணங்களால் வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தைகளில் ஆரம்பத்தில் 74.12 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பானது பின்பு அதிகப்படியாக 74.04 வரையும் குறைந்த அளவில் 74.22 வரையும் சென்றது.

வா்த்தகத்தினுடைய இறுதி கட்டத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயா்வடைந்தது 74.11-ல் நிலைபெற்றது. குறிப்பாக, நவம்பா் 6-ம் தேதிக்கு பின்னர் காணப்படுகின்ற அதிகபட்ச அளவு இதுவாகும்.

மூலதனச் சந்தைகளில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் 3860.78 கோடி ரூபாய் மதிப்புடைய பங்கினை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் ஆனது தெரிவிக்கின்றது.

அதே போல, சா்வதேச முன்பேர சந்தைகளில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையானது பேரலுக்கு 1.78% அதிகரித்து 45.76 டாலர் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar