சில நாட்களுக்கு முன் புதிய பங்கு வெளியீட்டை செய்த அதானி வில்மர் இந்தியாவின் மிகப்பிரபலமான வணிக குழுமமான அதானி குழுமத்தை சேர்ந்தவர். இந்த பங்குகள் செவ்வாய்க்கிழமை பிப் 8ம் தேதியன்று பட்டியலிடப்பட்டது. துவக்கத்தில் 3.91% தள்ளுபடி விலையில் இதன் ஒரு பங்கு விலை 221 ரூபாய் என இருந்தது. இதன் IPO விலை 230 ரூபாய்.

பெரிய நிறுவனத்தின் பங்குகள், தள்ளுபடி விலை ஆகியவற்றின் கவர்ச்சியில் நிச்சயம் புதிய முதலீட்டாளர்கள் பங்குகளின் மீது முதலீடு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்று கணித்தனர். அது சரியாகவே அமைந்தது. எதிர்பார்த்தபடியே பட்டியலிடப்பட்ட 2ம் நாளும் 20% முதலீடு அதிகரித்தே உள்ளது.

மும்பை பங்கு சந்தையில் அதானி வில்மர் பங்கின் விலை தற்போது 318.20 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதன் உச்ச விலை 318.20 ரூபாய் என்றும் குறைந்த பட்ச விலை 272.30 ரூபாய் என்றும் உள்ளது. தேசிய பங்கு சந்தையில் இதன் விலை 20% உயர்ந்துள்ளது. தற்போதைய வர்த்தக விலை 321.90 ரூபாய்.

என்எஸ்இ-யில் அதானி வில்மர் பங்கின் விலையானது 20% அதிகரித்து, 321.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தேசிய பங்கு சந்தையில் இதன் உச்ச விலை 321.90 ரூபாய், குறைந்தபட்ச விலை 272 ரூபாய்.

அதானி வில்மர் நிறுவன சந்தை மதிப்பு நிலவரம்

பங்குகள் பட்டியலிடப்பட்டதற்கு பின் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 40,614 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பங்கின் விலையும் 42.46% அதிகரித்துள்ளது. தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் பிரகாசமானதாக உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரையில் 26.31 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன.