அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதிலும் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப அனுமதிக்க வேண்டும், தெர்மல் ஸ்கேனிங்கை செய்த பின்பு தான் பார்வையாளர்களை உள்ளே செல்ல அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெறிவிக்கப்பட்டு உள்ளன. கோவிட்-19 தொற்றின் பாதிப்பினால் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆக நாடு முழுவதிலும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக, மிகப் பெரும் இழப்பினை சந்தித்த தியேட்டர் உரிமையாளர்கள், ஊரடங்கின் தளர்வில் விதிமுறைகளுடன் தியேட்டர்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.

திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதன் காரணத்தினால், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, நேரடியாக OTT தளங்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அக்டோபர் 15 முதல்:

இந்த நிலையில், நாடு முழுவதும் 5-வது கட்ட ஊரடங்கின் தளர்வில் அக்டோபா் 15-ம் தேதி முதல் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்கா, நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி வழங்கியது மத்திய அரசு. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • தியேட்டர்களில் 6 அடி சமூக இடைவெளி ஆனது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.
  • மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
  • தியேட்டர்களில் உள்ளே நுழையும் இடத்திலும், வெளியே வரும் இடத்திலும், பொதுவான பகுதிகளில் பார்வையாளர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.
  • எந்த இடத்திலும் எச்சில் துப்பக் கூடாது.
  • நுழைவாயிலில் தெர்மல் ஸ்கேனரின் மூலம் உடல் வெப்ப நிலை ஆனது கண்காணிக்கப்பட்டு, அறிகுறி இல்லாதவர்களை மட்டும் தான் அனுமதிக்க வேண்டும்.
  • பார்வையாளர்கள் இடைவெளி விட்டு வரிசையில் வருவதற்கு குறியீடுகள் ஆனது குறிக்கப்பட வேண்டும்.
  • திரையரங்கின் ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடையில் போதுமான நேர இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும்.
  • 50% இருக்கைகளில் மட்டும் தான் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
  • ஒரு இருக்கைகும் மற்றொரு இருக்கைகும் இடைவெளி விட்டு தான் பார்வையாளர்கள் அமர வைக்க வேண்டும். காலியாக உள்ள இருக்கைகளில் ஒளிரும் எழுத்துக்களில் ‘அமரக் கூடாது’ என்று எச்சரிக்கை செய்யப்பட வேண்டும்.
  • ‘அமரக் கூடாது’ என்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ONLINE மற்றும் OFFLINE டிக்கெட் புக்கிங் இரண்டிலும் காட்டப்பட வேண்டும்.
  • டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  • நெரிசலை தவிர்க்கும் அளவிற்கு டிக்கெட் கவுன்டர்களில் தேவையான அளவுக்கு இடம் அமைக்க வேண்டும்.
  • திரையரங்க வளாகம் முழுவதுமாக கிருமிநாசினி ஆனது தெளிக்கப்பட வேணடும்.
  • ஒவ்வொரு காட்சிக்கு மத்தியிலும் அரங்குகள் சுத்தம் செய்ய வேண்டும்.
  • AC 24-30 டிகிரி செல்சியசுக்குள் தான் இருக்க வேண்டும்.
  • திரைப்படம் துவங்குவதற்கு முன்பும் இடைவேளை சமயத்திலும், திரைப்படம் முடிந்த பின்பும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு குறும்படங்களை கட்டாயமாக திரையிட வேண்டும்.
  • ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும் போது ஒரே நேரத்தில் இடைவேளை விடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை மட்டும் தன விற்பனை செய்ய வேண்டும்.
  • திரையரங்கிற்குள் உணவு, குளிர்பானங்களை விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும்.

Author – Gurusanjeev Sivakumar