ஃபின்டெக் புரட்சியாக உருமாற்றம் அடையும் ஃபின்டெக்கின் முயற்சிகள்

புளூம்பெர்க் மற்றும் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) டிசம்பர் 3 & 4 இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்திருந்த Infinity Forum (இன்ஃபினிட்டி ஃபாரம்) நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார் “ஃபின்டெக் தொழில்துறை மிகப்பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது மேலும் இது வெகுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும் பொருளாதார / நிதிரீதியாக அதிகாரத்தை பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்துகொள்ள ஃபின்டெக்கின் முயற்சிகள் ஃபின்டெக் புரட்சியாக உருமாற்றம் அடைய இது ஒரு சரியான தருணம்.

நிதித்துறையில் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சி – மோடி குறிப்பிட்ட சில உதாரணங்கள்

நிதி சம்பந்தமான விஷயங்களில் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை வலியுறுத்துகிறது. உதாரணமாக கடந்த ஆண்டில் ATM மையங்களில் பணம் எடுக்கப்பட்டதை விட கைபேசி வழி நடந்த பேமன்ட்ஸ் அதிகம் என்றார். பத்தாண்டுகளுக்கும் குறைவான கால கட்டத்தில் மக்கள் நேரடியாக வங்கிகளை அணுகுவதை காட்டிலும் டிஜிட்டல் வங்கிகள் நாட்டில் ஸ்திரமாகியுள்ளது, இது மற்றுமொரு உதாரணம். பரிணாம வளர்ச்சி என்பது பல வகைகளுக்கும் பொருந்த கூடியது. மனிதர்களின் பரிமாணத்தை பொறுத்து அவர்களின் பரிவர்த்தனை முறைகளும் மாற்றம் பெற்றே வருகின்றன.

பண்டமாற்று – உலோகம், நாணயம், நோட்டு, காசோலை, கார்டு என்று மெல்ல மெல்ல உருமாறிய பரிவர்த்தனையில் இன்றைய தோற்றம் டிஜிட்டல் முறையில். தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் இந்தியா எப்போதும் 2-வது நிலையில் இருப்பதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே உள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் கீழ் ஏற்படவிருக்கும் இன்னும் பல மாற்றங்கள் ஃபின்டெக்கின் புதுமையான தீர்வுகளுக்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது. அவை ஆட்சிமுறையில் பயன்படுத்த உதவும் என்றார்.

நிதிச்சேர்க்கை என்பது ஃபின்டெக் புரட்சிக்கான முக்கிய உந்துசக்தி. நாட்டின் முக்கிய நான்கு தூண்களான வருமானம், முதலீடுகள், காப்பீடு மற்றும் நிறுவனக் கடன் ஆகிய நான்கிலும் ஃபின்டெக் இடம்பெற்றுள்ளது என்றார்.